ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள முல்லை போலீசார் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள முல்லை போலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு போலீசார் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குறிப்பாக 14.02.2021 ஞாயிறு நேற்றைய தினம் அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு போலீசார் சென்றிருந்தனர். போலீசார் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் 15.02.2021 இன்றையதினம் விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக போலீஸ் நிலையம் வருமாறு முல்லைத்தீவு போலீசார் ரவிகரனை அழைத்திருந்தனர். 

அந்த வகையில் போலீசாரின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அந்த வகையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad