இலங்கை, நேபாளத்தில் அரசாங்கங்களை அமைப்பதற்கான பா.ஜ.க.வின் திட்டம் அம்பலம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

இலங்கை, நேபாளத்தில் அரசாங்கங்களை அமைப்பதற்கான பா.ஜ.க.வின் திட்டம் அம்பலம்

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை அமைப்பதற்கான பாரதிய ஜனதா கட்சியின் லட்சியத்தை வெளிப்படுத்தியபோது, இந்திய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் சனிக்கிழமை ஒரு புதிய சர்ச்சையைத் தூண்டினார்.

கடந்த சனிக்கிழமையன்று திரிபுராவுக்கு சென்ற அமித் ஷா, ரவீந்திர சதாபர்ஷிகி பவனில் நடந்த கட்சி கூட்டத்தில், `இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பிறகு கட்சியை நிறுவி அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க பா.ஜ.க விரும்புகிறது’ என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லப் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வின் இந்த திட்டம் குறித்து பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மாநில விருந்தினர் மாளிகையில் அமித் ஷா வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, `இந்தியாவின் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது என்று கட்சியின் வடகிழக்கு மண்டலச் செயலாளர் அஜய் ஜாம்வால் கூறினார். 

அதற்குப் பதிலளித்த அமித் ஷா, இப்போது இலங்கையும், நேபாளமும் மீதமிருக்கின்றன. இலங்கையிலும், நேபாளத்திலும் கட்சியை விரிவுபடுத்தி, ஆட்சியமைக்க வேண்டும்’ என்று கூறியதாக பிப்லப் தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.க. வில் அமித் ஷாவின் தலைமையைப் பாராட்டிய தேவ், உலகளாவிய கட்சி என்று சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை உடைப்பதன் மூலம், பா.ஜ.க உலகின் மிகப்பெரிய கட்சியாக மாறிவிட்டது. இதற்கு அமித் ஷாவின் தலைமையே காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய திரிபுரா முதல்வர், கேரளாவில், ஆட்சியைப் பிடிப்பதற்கும், தற்போதைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் பா.ஜ.க பணியாற்றி வருகிறது. இதேபோல், வரவிருக்கும் தேர்தல்களில் மேற்குவங்க மக்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு விடை கொடுப்பார்கள். தமிழகம் உட்பட நாடு முழுவதும் தாமரை மலரும் என்றும் தெரிவித்தார்.

தற்சமயம் திரிபுரா முதலமைச்சரின் இந்த சர்ச்சைப் பேச்சு குறித்து பா.ஜ.க தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

முதல்வரின் சர்ச்சைப் பேச்சு குறித்துப் பேசிய சி.பி.ஐ (எம்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஜிதேந்திர சௌத்ரி, முதலமைச்சருக்கு அரசியலமைப்பு, ஜனநாயகம் குறித்து எந்த புரிதலும் இல்லை. தேவ் கூறிய அமித் ஷா வின் கருத்துகள், வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டைக் குறிக்கிறது.

இந்திய உள்துறை அமைச்சர் நேபாளத்துக்கு எதிரான அரச சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒருவரால் அவரது இந்தப் பேச்சுக்கு சாட்சியங்களை வழங்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இருந்தாலும், `பிப்லப் தேப் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க உயர் மட்டத் தலைவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று ஜிதேந்திர சௌத்ரி கூறினார்.

திரிபுரா காங்கிரஸின் துணைத் தலைவர் தபஸ் டே, அமித் ஷாவின் இத்தகைய பேச்சுக்கள் ஏகாதிபத்தியத்தை நினைவூட்டுகின்றன. இதை எதிர்த்துப் பல ஆண்டுகளாக இந்தியா போராடி வருகிறது. நேபாளம், இலங்கையின் இறையாண்மை விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது என்று விமர்சித்திருக்கிறார்.

வீரகேசரி

No comments:

Post a Comment