மியன்மார் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் - News View

About Us

Add+Banner

Tuesday, February 2, 2021

demo-image

மியன்மார் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

biden
இராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியன்மார் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியன்மார் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து வெளியிடுகையில், மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது 'நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இதுவாகும்.

மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 2016 ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும். 

இராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியன்மாரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *