ஷுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது - ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

ஷுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது - ஞானசார தேரர்

தனியார் தொலைக்காட்சி சேவையான "சிரச" தொலைக்காட்சியில், இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 இலட்சங்களை வென்ற, காலி - கட்டுகொட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி ஷுக்ரா முனவ்வரை, பலரும் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், (06) சனிக்கிழமையன்று, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஷுக்ராவின் வீடு தேடிச் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, "ஷுக்ரா போன்ற பிள்ளைகளை இந்த நாடு, முஸ்லிம் சமூகத்திடம் கேட்கிறது.

அத்துடன், தீவிரவாத குழுக்களின் தீவிரவாத கருத்துக்கள், இப்பகுதியில் பரவாமல் தடுப்பதற்கு, பாரம்பரிய முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாம் என்றென்றும் ஒத்துழைப்பு நல்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஞானசார தேரர், ஷுக்ரா முனவ்வருக்கு, சில அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கி, அவரை மகிழ வைத்தார்.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment