அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை நம்பிக்கை - உயர்ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் கருத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை நம்பிக்கை - உயர்ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் கருத்து

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இலங்கை கவனம் செலுத்துமென நம்புவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், (OHCHR) இலங்கை அரசாங்கம் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் பொருள் மற்றும் மிக முக்கியமான பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்துமென்று நம்புகிறது” என கூறியுள்ளார். 

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கையின் தமிழ்ப் பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதி செய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசு இந்த வாரம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment