மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை - சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்பவர்களை கைது செய்ய புதிய விதிகள் விரைவில் - கடலரிப்பைத் தடுக்க நாடு முழுவதும் 22 கடலோர வேலைத் தளங்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை - சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்பவர்களை கைது செய்ய புதிய விதிகள் விரைவில் - கடலரிப்பைத் தடுக்க நாடு முழுவதும் 22 கடலோர வேலைத் தளங்கள்

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் (9) நடைபெற்ற முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டத்தின்போது இவ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

காலத்துடன் போராடி ஐந்து வருட காலத்தில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி ஏற்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரதமர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்ய தேவையான பலமும் அனுபவமும் கொண்ட அரச அதிகாரிகள் குழு எங்களிடம் உள்ளது என தெரிவித்த பிரதமர், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக எழக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் கூறினார்.

நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சிற்கு சொந்தமான மற்றும் அவற்றில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

தனது இராஜாங்க அமைச்சின் கீழ் 07 நிறுவனங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேர ஏரியை சுத்தம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதை தேவையான நிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய சிக்கலாக கொழும்பு நகர சபையின் குப்பைகளை அகற்றும் செயல்முறையாகும் என்றும் அவர் கூறினார். 

உள்ளூராட்சி அமைப்புகளின் பரிந்துரைகளின் பேரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்குவது ஒரு பிரச்சினை என்று தெரியவந்தது. 

சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொள்பவர்களை கைது செய்ய நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படுமென்று கூறப்பட்டது.

இதற்கிடையில், கடலரிப்பைத் தடுக்க நாடு முழுவதும் 22 கடலோர வேலைத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பிரதான வீதிகளிலிருந்து கடற்கரையை அண்மித்த வீதிகளுக்கு மக்களுக்கு காணப்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வேகமாக உயர்வடைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

அதற்கமைய இந்த மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மெட்ரோ சாலை அமைப்பை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad