பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கயந்த கருணாதிலக - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கயந்த கருணாதிலக

(எம்.மனோசித்ரா)
பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற சிறந்த முகக் கவசங்களை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

பிள்ளைகள் வைரஸிலிருந்து நூறு வீதம் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று கூற முடியாது. இவ்விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். 

இவ்வாறான பின்னணியில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள பெற்றோர் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். குறைந்தது 4 பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் முகக் கவசம் வாங்குவதில் கூட நெருக்கடி உள்ளது.

எனவே அவ்வாறானவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற முகக் கவசங்களை இலவசமாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad