உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, குறித்த அறிக்கையை இன்று (25) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சிங்களம் மற்றும் ஆங்கில பிரதிகள் மாத்திரமே சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக இதன்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அது தொடர்பில் மூன்று நாள் விவாதமொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment