குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் பெயர் பெற்றுள்ளது : முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் பெயர் பெற்றுள்ளது : முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறுகளை அரச தலைவர்கள் கண்டறிந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்களே தோற்றம் பெறும் என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் பல எதிர்பார்ப்புக்கும், போராட்டத்திற்கும் மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்டு அரசாங்கத்தை தோற்று வித்துள்ளார்கள். 

பிரதமர் ஆட்சி நிர்வாக பயணத்தில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு அமர்த்தியவர்கள் நாங்கள் ஆகவே அவருக்கான உரிமையினை அவருக்கே பெற்றுக் கொடுப்போம். இதற்கு ஜனாதிபதி ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்.

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் பெயர் பெற்றுள்ளது. இதனை குறிப்பிட ஒருபோதும் அச்சம் கொள்ள மாட்டேன். 

தவறுகளை சுட்டிக்காட்டி ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்துவது மதத் தலைவர்களின் பொறுப்பாகும். தவறுகளை ஆட்சியாளர்கள் திருத்திக் கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய சிறந்த முறையில் ஆட்சியதிகாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஒரு தரப்பினர் அரசாங்கத்தின் விசுவாசிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள். ஆளும் தரப்பினர்களின் ஒரு சிலரது செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது. 

தவறுகளை கண்டறிந்து அதனை அரச தலைவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையே தோற்றம் பெறும். ஆகவே அரச தலைவர்கள் எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மேலும், மாறுப்பட்ட பல கருத்துக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும். பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் குறிப்பிட்ட கருத்து அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. 

ஆகவே கூட்டணிக்குள் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலம் நேரம் பார்ப்பது பொறுத்தமற்றது. விரைந்து செயற்படுதல் அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment