'மண்ணையும் பெண்ணையும் காப்போம்' : கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்ட மலையகப் பெண்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

'மண்ணையும் பெண்ணையும் காப்போம்' : கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்ட மலையகப் பெண்கள்

கொரோனாவுக்கு மத்தியில் மண்ணையும் பெண்ணையும் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் மலையகப் பெண்களின் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று (14.02.2021) இன்று காலை நடைபெற்றது.

பெண்கள் பச்சை நிற ஆடை அணிந்து நூறு கோடி மக்களின் எழுச்சி, இயற்கை உணவுகள் உண்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம், இயற்கையை காப்போம் போன்ற வசனங்களை எழுதிய பதாதைகளை காட்சி படுத்தியவாறு மிகவும் அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளுடன் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இயற்கையற்ற உணவு பயன்பாட்டின் காரணமாக உலகில் வாழும் நூறு கோடி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்குள்ளாகி வருவதுடன், இயற்கையில் அழிவின் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, பெண்களுக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், இதனால் மண்ணையும் பெண்ணையும் காக்கின்ற பொறுப்பு பெண்களுக்கு இருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிகழ்வுக்கு, 18 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad