தலவாக்கலை - லிந்துல நகர சபைத் தலைவர் அனகிபுர அசோக சேபால, பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இதனை அறிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொண்ட விசாரணை அறிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலவாக்கலை, லிந்துல நகர சபைத் தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை கடந்த ஜனவரி 25ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
தலவாக்கலை - லிந்துல நகர சபைத் தலைவர் மீது சுமத்தப்பட்டிருந்த 11 குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் விசாரணைக் குழுவொன்று ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய 619 பக்கங்கள் கொண்ட குறித்த அறிக்கையின் பிரகாரம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment