மேல் மாகாணத்தில் உள்ளடக்கிய வகையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,406 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 10 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 சந்தேகவர்களும், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 44 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது
நேற்று (06) காலை 06.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கடவத்த பிரதேசத்திலுள்ள நடைபாதை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment