உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்காக 30 பேரின் தகவல்கள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்காக 30 பேரின் தகவல்கள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தகவல்கள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 251 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

கர்தினாலுக்கு கத்தோலிக்க மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியுள்ளமையை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். மனித கொலை மற்றும் அதற்கு திட்டம் தீட்டியமை தொடர்பில் சட்டமா அதிபருக்கு நாம் தகவல்களை முன்வைத்துள்ளோம். 

இறுதியறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே வழக்கு தொடரப்படும். வழக்கு தாக்கல் செய்ததன் பின்னரே நாம் எப்படி வேலை செய்கின்றோம் என்பது தெரியவரும். பொலிஸாரிடம் இருந்து பெற வேண்டிய அனைத்து ஆலோசனைகளும் முடிந்துள்ளன என கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜெனிவா எப்போதும் எமக்கு எதிராகவே செயற்படுகின்றது. எமக்கு பாதிப்பான 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அதனூடாக பல நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளன. 

இம்முறை 5 நாடுகள் இலங்கைக்கு எதிரான யோசனையை முன் வைக்க தயாராகவுள்ளன. அந்த யோசனையை நிராகரிக்கவே நாம் எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment