தன்சானியாவில் மர்ம நோய் - 15 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

தன்சானியாவில் மர்ம நோய் - 15 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

அடையாளம் காணப்படாத நோய்த் தொற்று ஒன்றினால் தெற்கு தன்சானியாவில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதோடு 50 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குமட்டல் மற்றும் இரத்த வாந்தி எடுப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவ குழுவொன்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்தத் தொற்று எவ்வாறு ஆரம்பித்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தொலைதூர சுன்யா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பிட்சால் கிசன்டோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad