புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 1,380 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 1,380 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டது

கற்பிட்டி அம்மாதோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான மஞ்சள் இன்று (07) கற்பிட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

குறித்த மஞ்சள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக இந்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுமார் 1,380 கிலோவும் 500 கிராமும் எடையுடைய சமையல் மஞ்சளே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்பதோடு தற்போதைய சந்தைப் பெறுமதி 96 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை மற்றும் உத்தரவுக்கு அமைய, பொலிஸ் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த சமையல் மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கற்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.டீ.பீ. வீரசிங்க தெரிவித்தார்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment