பேலியகொட C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம் - ஒரே கூரையின் கீழ் கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

பேலியகொட C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம் - ஒரே கூரையின் கீழ் கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள்

முனீறா அபூபக்கர்

பேலியகொட C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (18) மீண்டும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக தலைமை அலுவலகர் யோஷித்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கைக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு இணங்க, பிரதமர் அலுவலக அதிகாரி யோஷித்த ராஜபக்‌ஷவின் முழு மேற்பார்யின் கீழ் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2012.11.26 அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 14 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் கடந்த நல்லாட்சியின் போது இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

C City பல் பொருள் அங்காடி நிலையம் நிர்மாணித்ததன் பின்னர் வாடிக்கையாளர்கள் கட்டுமானத் துறையின் அனைத்து மூலப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும்.

இந்த வேலைத் திட்டத்தின் ஆரம்ப விழா இந்த பல் பொருள் அங்காடி நிலையத்தின் உத்தியோகபூர்வ வலையத்தளமான www.city.lk உம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இங்குள்ள பல கடைகளும் இன்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் தேசிய இயந்திர நிலையத்தில் சேவையை நிறைவு செய்த 50 ஊழியர்களுக்கு ரூபா. 233 இலட்சமும் நன்கொடை சன்மானமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிற ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, பேலியகொட நகர சபை மேயர் கே.டீ. ஆனந்த, வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி கலுபஹன மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment