(திருக்கோவில் நிருபர்)
மட்டக்களப்பு காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்து இன்று (31) சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பிரிவில் 7 பிரிவையும் தேசிய கொவிட்-19 செயலணியில் இருந்து அறிவித்தல் வரும்வரை உடனடியாக மூடுவதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணில் தீர்மானிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. பின்னர் 7 கிராம சேவகர் பிரிவு விடுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் தன்னிச்சையாக தீர்மானித்து கொவிட் சட்டத்திற்கு முரணாக 7 கிராம சேவகர் பிரிவை இன்று ஞாயிற்றுக்கிழமை (31) விடுவிப்பதாக அறித்து வித்துள்ளனர்.
இதனையடுத்து எற்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபர், இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவசரமாக மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது
இதில் எந்த பகுதியை தனிமைபடுத்துவது அல்லது விடுவிப்பது தொடர்பாக மாவட்ட செயலணிக்குழு கொவிட்-19 தேசிய செயலணிக்கு பரிந்துரைக்க முடியும் அதற்கான முடிவுகள் பிரகாரம் நாங்கள் அதனை அமுல்படுத்த முடியும் இருந்தபோதும் தன்னிச்சையாக எவரும் முடிவு எடுக்க முடியாது.
எனவே தன்னிச்சையாக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவும் கொவிட்-19 தேசிய செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக முடக்கப்படும் என மாவட்ட செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே கொவிட்-19 சட்ட விதிமுறைகளுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட காத்தான்குடி 7 கிராம சேவகர் பிரிவும் உடனடியாக முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment