அமைதிக்கான நோபல் பரிசுக்காக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர், காலநிலை பிரச்சாரகர், உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 31, 2021

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர், காலநிலை பிரச்சாரகர், உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

ரஷ்ய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுடன் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் நோர்வே சட்டமியற்றுபவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் வெற்றியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வேட்பாளர்களை முன்மொழிய தகுதியுடையவர்கள்.

நோர்வே சட்டமியற்றுபவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இறுதி பரிசு பெற்றவர்களை பரிந்துரைத்துள்ளனர்.

நோர்வே சட்டமியற்றுபவர்களின் ரொய்ட்டர்ஸ் கணக்கெடுப்பின்படி, ஏழை நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு நியாயமான அணுகலைப் பெறுவதற்கான துன்பெர்க், நவல்னி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டம் ஆகியவை மேற்கொள்ளிட்டு காட்டப்படுகிறது.

No comments:

Post a Comment