ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாக மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக உள்ளுராட்சி உதவி ஆணையாளரால் ஏறாவூர் நகர சபை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை பிரதேச சபை ஆகியவற்றின் செயலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை 29.01.2021 அறிவித்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்களது சபையில் இவ்வாண்டுக்கான 2021 பாதீடு நிறைவேற்றப்படாமல் இருக்கின்றபடியால் உள்ளுர் அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் கடந்த டிசெம்பெர் 31ஆம் திகதி முதல் தவிசாளர் தனது பதவியிலிருந்து விலகியதாகவும் பதவி வறிதாக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது.
இதற்கேற்ப உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டத்தினை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரால் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இது தொடர்பில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் உரிய தரப்பினருக்கு அறிவிக்குமாறும் கெட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment