மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் நாம் எதனையும் கூற விரும்பவில்லை. அது அவர்களது தீர்மானமே. தமிழ்க் கட்சிகள் எடுத்து தீர்வுத்திட்டத்தின் பிரகாரம் எமது செயற்பாடுகள் ஜெனிவா அமர்வில் இடம்பெறுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.
புதிய ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எமக்கு கருத்துகளை கூற முடியாது. அது அவர்களது தீர்மானமாகும். அதற்கு நாம் பதிலளிக்க வேண்டியதும் இல்லை. தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் பிரகாரம் ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” என்றும் அவர் கூறினார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment