இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை (05.01.2021) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கை வரும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நாளை மறுதினம் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனும் கலந்துரையாடவுள்ளார்.

கடந்த ஆண்டு கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad