பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது

(செ.தேன்மொழி)

அநுராதபுரம் - ருவன்வெலிசாயாவில் பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அநுராதபுரம் - ருவன்வெலிசாய பிரதான பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்த பிக்குகளுக்காக தானம் செய்யப்படும் பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர் தன்னை பிக்கு என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்ளுக்கு எதிராக கொள்ளை மற்றும் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் , அநுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment