கொழும்பு துறைமுக கிழக்கு முனைய பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்காதது ஏன் - துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்காதது ஏன் - துஷார இந்துனில்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 49 வீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு 600 மில்லியன் டொலர் மாத்திரமே வருமானமாகக் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறெனில் அந்த வாய்ப்பை ஏன் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 49 வீதம் வெளிநாட்டுக்கு வழங்கி விட்டு 600 மில்லியன் டொலர் மாத்திரமே அவர்களுக்கு கிடைக்கும் எஞ்சிய 51 வீதம் எமக்குரியதாகும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து கூறுகிறார். 

எமது நாட்டில் காணப்படுகின்ற இலாபமீட்டக்கூடிய தேசிய சொத்தினை வெளிநாட்டுக்கு வழங்க வேண்டாம் என்று கூறுகின்ற போதிலும் அதனை வழங்கியுள்ளனர்.

600 மில்லியன் டொலர் மாத்திரமே வெளிநாட்டுக்கு வருமானமாக இருந்த போதிலும் அதனை தேசிய முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியுமல்லவா ? தமக்கு நெருக்கமானவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

எமது ஆட்சிக் காலத்தில் டொலர் பெறுமதி அதிகரிப்பு குறித்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்து யாரும் கவனத்தில் கொள்வதில்லை. டொலரின் பெறுமதி 200 ரூபாவை அண்மிப்பதற்கு இன்னும் சில இடைவெளியே காணப்படுகிறது.

இந்த அரசாங்கம் தற்போது முழுமையாக பொய் கூறியே ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. இதற்கு முன்னர் பேலியகொடை, மினுவாங்கொடை கொத்தணி பற்றி பேசிக் கொண்ருந்தோம்.

தற்போது தலதா மாளிகை வளாகத்தில் பலருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உதயங்க வீரதுங்கவின் உக்ரேன் கொத்தணியாகும்.

இதேபோன்று அனைத்து கொத்தணிகளையும் புறக்கணித்து சுற்றுலாத்துறையை ஆரம்பித்து நாட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே அரசாங்கத்தின் செயற்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment