திருமண மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

திருமண மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்

கேகாலை பிரதேசத்தில் நேற்று திருமணம் செய்துகொள்ளவிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக இவர் சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எம்.பீ.பிரதிப் ரஞ்ஜன் குமாரசிங்க என்ற 30 வயது பட்டதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்சாரம் தாக்கிய இந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவரென்றும் மாலைதீவில் 06 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment