போக்கு வரத்து அபராதம் செலுத்தும் சலுகை காலம் இன்றுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

போக்கு வரத்து அபராதம் செலுத்தும் சலுகை காலம் இன்றுடன் நிறைவு

கொரோனா பரவல் காரணமாக காலாவதியான போக்கு வரத்து குற்றங்களுக்கான அபராத சீட்டுகளுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது. தபால்மா அதிபர் இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, உரிய அபராதத் தொகைகளை தபாலகங்கள், உப தபாலகங்களில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கொழும்பு நகர போக்கு வரத்து பிரிவு மற்றும் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட அபராத சீட்டுகளை செலுத்துவதற்கான சலுகைக் காலம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய, குறித்த சலுகைக் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக, தபால்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment