அளுத்கமயில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உட்பட ஆறு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

அளுத்கமயில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உட்பட ஆறு பேருக்கு கொரோனா

(செ.தேன்மொழி)

அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகளின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உட்பட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம - தர்கா நகரத்தில் இன்று திங்கட்கிழமை 100 பேருக்கு எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஆறு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதான பொலிஸ் பரிதோசகர் ஒருவருக்கு, பொலிஸ் கான்ஸ்டபில் இருவருக்கும், சார்ஜன்கள் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அளுத்கம பொலிஸ் நிலையம் தற்போது தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்து வரும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது வேறு ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment