குளிர்காலத்தில் உலக சாதனை படைத்தது மலையேறி நேபாள குழு - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

குளிர்காலத்தில் உலக சாதனை படைத்தது மலையேறி நேபாள குழு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலையான கே-2 இன் உச்சியை குளிர்காலத்தில் தொட்டு 10 பேர் கொண்ட நோபள மலையேற்றக் குழு ஒன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. 

பாகிஸ்தானிய எல்லையில் அமைந்துள்ள 8,600 மீற்றர் உயரம் கொண்ட கே-2 மலை இமயமலைத் தொடரில் மிகப் பிரபலமானது. 

இது உலகின் உயரமான எவரெஸ்ட் மலையை விடவும் 200 மீற்றர் மாத்திரமே உயரம் குறைவானது. இங்கு மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மிக அபாயமிக்க மலையாக அழைக்கப்படுகிறது.

எனினும் இந்தப் பருவத்தில் கே-2 உச்சியை தொட பலரும் முயற்சித்ததில் நேபாளக் குழுவே வெற்றி கண்டுள்ளது. இந்த முயற்சியின்போதும் ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

 1987-1988 பருவம் தொடக்கம் பனிக் காலத்தில் இந்த மலை உச்சியைத் தொடும் முயற்சிகள் பல இடம்பெற்றபோதும் தற்போதே அது வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment