ஹட்டனிலுள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் - குடாகம பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் R.R.S. மெதவெல குறிப்பிட்டார்.
இந்த மாணவர் இறுதியாக கடந்த 20 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.
இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருடன் நெருங்கிப் பழகிய 37 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் கூறினார்.
12 ஆசிரியர்களும் மாணவனின் தாயுடன் பழகிய 6 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருடன் தொடர்புபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் R.R.S. மெதவெல குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment