தலதா மாளிகை ஊழியர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் வெளியானது - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

தலதா மாளிகை ஊழியர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் வெளியானது

கண்டி - தலதா மாளிகையின் ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையின் பேரிலும், தியாவதான தலைவர் மேற்பார்வையிலும் தினசரி மத அனுசரிப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களை திரையிடுவதற்கான சிறப்பு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தலதா மாளிகை வளாகத்தில் கடமையில் இருந்த பல பொலிஸாருக்கு தொற்று உறுதியாகியமையை வெளிப்படுத்தியது.

இவ்வாறு தொற்று உறுதியான பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தலதா மாளிகை ஆலய ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment