(செ.தேன்மொழி)
மாத்தறை மற்றும் எல்பிட்டி பகுதியில் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தாக நேற்று கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய, தொடர்ந்தும் இவ்வாறான மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதற்கமைய, மாத்தறை பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படும் இளைஞனிடமிருந்து, 5,000 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக போக்கு வரத்து பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவருடன் இருந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பிலும் ஒழுங்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன. சந்தேகநபரான கான்ஸ்டபிள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, எல்பிட்டி பகுதியில் சிகரட் உற்பத்தி நிலைமொன்றில் நேற்று, சிலர் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளதாக தெரியவந்தை அடுத்து, அந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கான்ஸ்டபிள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவும் உள்ளார்.
No comments:
Post a Comment