கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இன்றையதினம் (15) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 180 புள்ளிகளாக காணப்பட்டது.
பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 181 புள்ளிகளும் (கடந்த முறை 175), பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 174 புள்ளிகளும் (கடந்த முறை 167), அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 181 புள்ளிகளும் (கடந்த முறை 168), மூதூர், மத்திய கல்லூரிக்கு 171 புள்ளிகளும் (கடந்த முறை 159) அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 புலமைப்பரிசில் பெறுபேறுகள் கடந்த நவம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன.
ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
கொழும்பு ரோயல் கல்லூரி - 187
டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179
பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178
இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174
யாழ். இந்துக் கல்லூரி - 166
யாழ். மத்திய கல்லூரி - 161
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160
ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160
சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160
திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159
புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157
பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181
பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174
யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173
கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170
யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169
வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169
கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166
ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166
பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163
திருகோணமலை, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160
கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181
மூதுர், மத்திய கல்லூரி - 171
கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168
கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167
ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166
சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165
கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164
மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164
கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164
ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164
விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164
கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163
கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162
கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162
மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162
அக்கரைப்பற்று, ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162
மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161
அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161
கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161
No comments:
Post a Comment