தகன பிரச்சினை குறித்து எந்த குழுவையும் அரசு நியமிக்கவில்லை - சமூகவலைத்தள செய்திகளில் உண்மையில்லை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

தகன பிரச்சினை குறித்து எந்த குழுவையும் அரசு நியமிக்கவில்லை - சமூகவலைத்தள செய்திகளில் உண்மையில்லை

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, குழு ஒன்றை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கொவிட்-19 கட்டுப்பாடு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமென ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நோய் கட்டுப்பாடு தொடர்பில் முடிவுகளை எடுக்கும்போது மதம், இனம், அரசியல், சமூக மற்றும் புராதன நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment