அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை - நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை - நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே குறித்தவொரு சமூகத்தை இலக்கு வைக்கும் விதமான 'கட்டாயத் தகனம்' என்ற தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும்.

மாறாக விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணிகளை மையப்படுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பினால் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெனிஸ்லஸ் துஷான், நபீலா இக்பால், செனெல் வன்னியாராச்சி, நெத்மினி மெடெவல, சுச்சித் அபேயவிக்கிரம ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அதன்போதே மேற்கண்டவாறு ஒருமித்து வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment