இஸ்ரேல் - சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

இஸ்ரேல் - சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

இஸ்ரேலுடன் மற்றும் அரபு நாடான சூடான் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியால் பல்வேறு அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்ததில் ஈடுபட்டு வருகிறது. 

இதன் மூலம் அரபு நாடுகள் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராகவும் அங்கீகரித்து வருகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியினால் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் மொரோக்கோ ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், அரபு நாடான சூடானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அமெரிக்காவின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே நேற்று (6) அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது.

சூடானை பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இஸ்ரேலுடன் சூடான் அமைதி ஒப்பந்தம் (ஆபிரகாம் உடன்படிக்கை) செய்துகொண்டுள்ளது.

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சூடானுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் டொலர் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்க நிதித்துறை கருவூல தலைமை அதிகாரியின் சூடான் பயணத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வாக உள்ளது.

No comments:

Post a Comment