போதைப் பொருளுடன் சிவனொளிபாத மலை சென்ற இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

போதைப் பொருளுடன் சிவனொளிபாத மலை சென்ற இருவர் கைது

நல்லத்தண்ணி பொலிஸ் பரிவில் போதைப் பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் நல்லத்தண்ணி பொலிஸ் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரண்டு இளைஞர்களை சோதனையிட்ட போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ, தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியன இன்று (15) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment