16 பேருக்கு கொரோனா - நாவலபிட்டி நகரில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

16 பேருக்கு கொரோனா - நாவலபிட்டி நகரில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் .

நாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment