மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பு பகுதியில் இருந்து மன்னாருக்குச் சென்று எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கே செவ்வாய்க்கிழமை மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு திங்கட்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை மாலை கிடைக்கப் பெற்ற நிலையிலேயே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் குறித்த குடும்பத்தினரை பாதுகாப்பான முறையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment