பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம்

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியான பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்து அமைச்சரபை நடவடிக்கை எடுத்து உள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியான பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் நயீம் புகாரி. பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான இவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது.

எனவே 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவன தலைவராக நியமிக்க உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி புகாரிக்கு எதிராக இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் புகாரி நியமனத்துக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து புகாரியை பதவி நீக்கம் செய்து அமைச்சரபை நடவடிக்கை எடுத்து உள்ளது. புகாரிக்கு பதிலாக அமர் மன்சூரை புதிய தலைவராக நியமனம் செய்துள்ளது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி தலைமை பொறுப்பில் இருந்து நயீம் புகாரி நீக்கப்பட்ட சம்பவம் இம்ரான்கானுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment