இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த சிறைக் கைதிகளின் தொகை 9 ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த சிறைக் கைதிகளின் தொகை 9 ஆக அதிகரிப்பு

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும், புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

எனினும் இன்றையதினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக் கைதியாவார்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 138 பேரே இதுவரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4105 பேர் குண்மடைந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 388 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள், 489 ஆண் சிறைக் கைதிகள், 11 பெண் சிறைக் கைதிகள், 3ஆயிரத்து 520 ஆண் விளக்கமறியல் கைதிகள், 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment