கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்குமான கொடுப்பனவுகளை இணையத்தின் ஊடாக செலுத்த நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்குமான கொடுப்பனவுகளை இணையத்தின் ஊடாக செலுத்த நடவடிக்கை

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் அனைத்து இறக்குமதி செயற்பாடுகளுக்குமான கொடுப்பனவுகளை இணையத்தின் ஊடான இலகு கொடுப்பனவு வழிமுறைகளில் செலுத்துவதற்கு இலங்கைத் துறைமுக அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறையின் ஊடாக சேவை பெறுநர்கள் தமது வீடுகளில் அல்லது தொழில் நிலையங்களில் இருந்தவாறு துறைமுக கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

துறைமுக அதிகார சபை தலைவர் ஜெனரால் தயாரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இந்த விசேட திட்டத்தின் கீழ் துறைமுகத்தில் சேவைப் பெறுநர்கள் இலகுவான முறையில் சேவைகளை சிறந்த சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளன. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் உள்ள முனையங்களின் சேவை நடவடிக்கைகள் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக முனையங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய முகாமைத்துவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய துறைமுக சேவை நடவடிக்கைகளை இணையத்தள வழிமுறைகள் ஊடாக உரிய நடவடிக்கை சேவை பெறுநர், சேவை வழங்குனர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முழுமையான கொள்கலன் களஞ்சியப்படுத்தல், பகுதியளவான கொள்கலன் களஞ்சியப்படுத்தல், வெளியீட்டு முகவர் ஆகிய விடயங்கள் துறைமுக அதிகார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad