போலீஸ் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

போலீஸ் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை

சார்ஜா பகுதியில் போலீஸ் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் துபாய் - சார்ஜா போலீசார் கூறியிருப்பதாவது சார்ஜா பகுதியில் போலீஸ் என கூறி பொதுமக்களிடம் சோதனையில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களை போலீசார் என கூறி யாராவது நிறுத்தினால் அவர்களது அடையாள அட்டையை வாங்கி பார்க்க வேண்டும். அடையாள அட்டையை சரியாக காண்பிக்காமல் இருந்தால், மீண்டும் வாங்கி பார்க்க முழு உரிமை உள்ளது. மேலும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுவான சோதனைகளின் போது போலீசார் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே வாங்கி சோதனை செய்வர். பணப்பை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சோதனை செய்ய மாட்டார்கள்.

இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுபவர்கள் அரபி மொழி பேசாதவர்களிடம் மட்டுமே தங்களது செயலை காண்பித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரபி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய விதி மீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment