திருகோணமலையில்18 பேருக்கு கொரோனா - லைவ்லேன், சிறிமாபுர பகுதிகள் மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

திருகோணமலையில்18 பேருக்கு கொரோனா - லைவ்லேன், சிறிமாபுர பகுதிகள் மூடப்பட்டது

திருகோணமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (03) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் லைவ் லேன் பிரதேசத்தில் ஐவரும், ஐமாலியா பிரதேசத்தில் ஐவரும், சிறிமாபுர பிரதேசத்தில் ஏழு பேரும், கிண்ணியா பிரதேசத்தில் ஒருவருமாக 18 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் அவர்களில் இன்று மட்டும் பதின்நான்கு பேர் ஈச்சிலம்பற்று, காத்தாங்குடி கொரோனா மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என வைத்தியர்.வீ .பிரேமானந்த் தெரிவித்தார்.

அத்துடன் லைவ்லேன், சிறிமாபுர பகுதிகள் இன்று நண்பகலுடன் மூடப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளதுடன் மறிக்கப்பட்டுள்ள இடங்களில் வீதித் தடைகள் இடப்பட்டு பொலிஸாரின் வழிநடத்தலில் இரானுவமும் பொலிஸாரும் காவல் கடமையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad