சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தால் PCR செய்ய தயார் - சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தால் PCR செய்ய தயார் - சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு

சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு வாகனத்தில் பணிபுரியும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

எனினும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும் அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதி இரண்டாவது தடவையாகவும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளனர். 

அத்தகைய சூழ்நிலையிலேயே மருத்துவத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தால் தாமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment