இறுதியில் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்தார் ரஜினி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

இறுதியில் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்தார் ரஜினி

தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என, இந்திய நடிகர், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் (29) அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கட்சி ஆரம்பிக்கும் அறிவித்தலை கடந்த டிசம்பர் 03ஆம் திகதி ரஜினிகாந்த் அறிவித்ததோடு, டிசம்பர் 31ஆம் திகதி அது தொடர்பான திகதியை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

தமிழக சட்ட சபைத் தேர்தல் எதிர்வரும் 2021 மே 24ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 12ஆம் திகதி தனது 70ஆவது வயதை கடந்த ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்க கடந்த 13ஆம் திகதி தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றிருந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொண்டு தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார்.

இந்நிலையில் 120 பேர் கொண்ட படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்திருந்த அவர், ஹைதரபாத்திலுள்ள அப்பலோ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது தனது உடல் நிலை மற்றும் தன்னுடன் உள்ளவர்களது உடல் நிலை, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளதாக ரஜினிகாநத் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment