பிடிவாதத்தை கைவிட்டு நிவாரண நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

பிடிவாதத்தை கைவிட்டு நிவாரண நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட்-19 நோய்த் தொற்றைச் சமாளிப்பதற்கான நிவாரண நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பல மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வேலையின்மை அனுகூலங்களை மீண்டும் பெற அந்த 2.3 டிரில்லியன் டொலர் மதிப்பிலான திட்டம் வழிவகுக்கும்.

மேலும், ட்ரம்ப் சட்டமூலத்தில் கையெழுத்திட்டதால் மத்திய அரசாங்க வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்களை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

பலர் சிகிச்சைக்காக அதிக பணம் செலவிடப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.66 லட்சம் கோடி பணத்தை நிவாரணமாக வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்துக்கு பாராளுமன்ற அவை மற்றும் செனட் சபை ஆகியவை ஒப்புதல் அளித்தன. இறுதியாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால்தான் சட்டம் அமுலுக்கு வரும்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இந்த சட்டத்தில் கையெழுத்து போட மறுத்தார். கொரோனா நிவாரணம் போதுமானதாக இல்லை என்று கூறி கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்தார்.

சிரமப்படும் அமெரிக்கர்களுக்கான நிவாரணத் தொகை 600 டொலரிலிருந்து 2000 டொலருக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் இப்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் கூறினர்.

இதனால் அமெரிக்காவில் குழப்பமான நிலை ஏற்பட்டது. அடுத்ததாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனும் டிரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பல சட்ட நிபுணர்களும் டிரம்பின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.

இதையடுத்து டிரம்ப் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக அமெரிக்க மக்களுக்கு பெருமளவு நிவாரணங்கள் கிடைக்கும்.

சுமார் 14 மில்லியன் பேர் பயன்பெற்றுவந்த வேலையின்மை அனுகூலத் திட்டம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 26) முடிந்தது. அது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment