ஈரானின் சொந்த கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

ஈரானின் சொந்த கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி ஆரம்பம்

ஈரானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த சிபா பார்மட் எனும் மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

ஈரானில் உருவாக்கப்பட்ட முதல் மருந்தான அதை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணியை கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் ஆரம்பித்தது. 

மக்களிடையே மருந்து மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் தடுப்பூசி மருந்தை அந்நிறுவன தலைவரின் மகளுக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் முதலில் செலுத்தப்பட்டது.

எனினும் மனிதர்களிடம் இந்தத் தடுப்பு மருந்து சோதனைக்கு 60,000 க்கு அதிகமான தன்னார்வலர்கள் முன்வந்ததாக ஈரான் சுகாதார அமைச்சு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

இது தவிர ஈரானில் தயாரிக்கப்பட்ட மேலும் ஏழு கொரோனா தடுப்பு மருந்துகள் வரும் பெப்ரவரி மாதம் அளவில் ஒப்புதலை பெற காத்திருப்பதாக சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.

No comments:

Post a Comment