இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்றது, நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்றது, நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை முறைமை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும். இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது இரு வேறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. மாகாண சபை தேர்தல் முறைமை இலங்கைக்கு பொறுத்தமற்றது என்றே குறிப்பிட வேண்டும்.

மாகாண சபை தேர்தல் வெள்ளை யானை என்றே குறிப்பிட வேண்டும். மாகாண சபை முறைமையினால் தேவையற்ற செலவுகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.

மாகாண சபைக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அரசியல் நோக்கங்களை இலக்காக கொண்டுள்ளார்கள். தேவையற்ற செலவுகளை குறைப்பது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. ஆகவே மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க வேண்டும்.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment