வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மற்றும் தீவகத்தின் சப்த தீவுகளுக்கிடையிலான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்த்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் நிதியுதவியில் ஊர்காவற்றுறையில் நிர்மாணிக்கப்பட்ட வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டத் தொகுதி மற்றும் கடற்கலன் பரிசோதிக்கும் தளம் ஆகியவை துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் பாராளுமன்றகுழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று (23) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத குருமார்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தீவக பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் கடற்படையினர், பொலிஸார்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், தீவக பிரதேசங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கொவிட்-19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் கடல் போக்குவரத்து மூலம் பொருட்களை ஏற்றல் இறக்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்து துறைகளை நம்பி தொழில்களை செய்யும் தீவக மக்களுக்கு இன்று திறந்து வைக்கப்பட்ட கப்பற்துறை அமைச்சின் உப அலுவலகம் மற்றும் கடற்கலன் பரிசோதிக்கும் தளம் மூலம் பற்பல நன்மைகள் கிடைக்கப்போவதை இட்டு மகிழ்வடைகிறேன்.

அன்துடன், இன்றையதினம் எமது அழைப்பை ஏற்று கங்கேசன்துறை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன மேற்கோள்வதை இட்டு மகிழ்வடைகிறேன். இந்த விஜயம் மூலம் எமது வரலாற்று பெருமைமிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மீண்டும் கட்டியேழுப்பப்படும் என நம்புகிறேன்.

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிளால் இலங்கையில் நான்கு மாவட்டங்கள் மூலோபாய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதில் யாழ் மாவட்டமும் அடங்குகிறது. அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இந்த திட்டத்தால் பல்வேறு நன்மைகள் நடைபெறும் என்பதில் ஐயம் இல்லை. 

இந்திய அரசாங்கத்தின் உதவியால் இந்த துறைமுறைகத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன் இந்திய அரசின் உதவி திட்டத்தை பயன்படுத்தி எமது இந்த காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரித்து பொருளாதார பயன்களை யாழிற்கு கொண்டு வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். யாழ்ப்பாணத்திற்கான தேவைகளை அவர் தொடர்ந்தும் செய்வார் என நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன “சுபீட்சத்தன் நோக்கு” என்ற தொனிப்பொருளில் எமது அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து மக்களும் சமமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீழ்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி மூலம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் செயற்பட்டுகொண்டு இருக்கிறது.

தெற்கில் பிள்ளைகள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வடக்கிலும் பிள்ளைகள் வாழ வேண்டும், இந்த உப செயலகம் மூலம் கொழும்பு சென்று செய்ய வேண்டிய கப்பல்கள் சம்மந்தமான வேலைகளை இங்கேயே செய்ய முடியும். 

காங்கேசன்துறை துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன். நாம் சக்தி மிக்ககவர்களாகவும் திகழ வேண்டும். யாழ் மாவட்டத்தின் பிரஜைகளே காங்கேசன்துறை துறைமுகத்தில் வேலை செய்யமுடியும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

இந்த வேலைத்திட்டத்திற்கு யாழ் மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே காரணம் எனவும் இந்த இடத்தில் கூறிகொள்ள விரும்புகிறேன்.

இதிகாசத்தில் நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நாம் இலங்கையர்கள் என்ற ஒரு நாமத்துடன் என்று வாழ வேண்டும், அனைவரும் கரம் கோர்த்து பயணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment