புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி வேலை செய்யும் - பயோன்டெக் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி வேலை செய்யும் - பயோன்டெக் நிறுவனம்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிக்கு உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்துதான் ஒப்புதல் வழங்கியது. அங்கு கடந்த 8ம் திகதி முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஒட்டு மொத்த உலகையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் எங்கள் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு ஆற்றல் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது. 

ஆனால் சோதனை செய்யப்பட்டால் மட்டுமே நாங்கள் அதை உறுதியாக அறிவோம். சோதனையின் தரவுகளை பெறுவதற்கு இப்போதிலிருந்து சுமார் 2 வாரங்கள் தேவைப்படும்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment