ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பு

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்செலெட் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்து நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் நடைமுறை ரீதியான முன்னேற்றங்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அந்த அறிக்கை தற்போது இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த அறிக்கையை இம்முறை மார்ச் மாத அமர்வுக்கு முன்னதாக வெளியிடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாடுகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இராஜதந்திர தரப்புக்களிடத்தில் வெளிப்பாடுகளைச் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று புதன்கிழமை சந்தித்தார்.

இதன்போது, ஹனா சிங்கர் மற்றும்ரூபவ் சாரா ஹல்டன் ஆகியோர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment